Latest Posts

Friday 29 April 2011

The Call of Duty - Islamization of Education



Do you think misunderstandings in Islam can be solved by commenting on few video clips and images with preoccupied and biased minds? I recommend my friends not to comment on the thread which is turning to nasty from friendly discussion.. Allah SWT says in the Quran "And when you see those who engage in [offensive] discourse concerning Our verses, then turn away from them until they enter into another conversation. And if Satan should cause you to forget, then do not remain after the reminder with the wrongdoing people. 6:68"

Leave the scholarly fights to scholars.. Do not try to overtake them with knowledge learned in Internet and reading few books and listening to lectures of few scholars.. Do not slander over scholars even u have other opinion from them.. Do not promote such debates.. Identify the difference between Shareeah & Fiqh.. If someone is saying that you have to pray only three times a day, then it is Shareeah issue.. If someone is promoting grave worshiop, then it is Aqeedah Issue,, You have a right to fight for it to prevent such propaganda from spreading.. You will get reward for every other second you are spending in this cause.. In other case, if some imam is having difference of opinion on issues like how to pray, try to respect him though you have other opinions.. Allah is watching the intention of peoples rather than actions.. Instead of wasting time over responding word by word or phrase by phrase, you can involve yourself in organized study of Islam as BAIS in Islamic Online University or other graduate courses or diploma courses in Islamic Studies..

You can postpone your harmonic stimulation of responding to facebook posts and you can do some ground work on analyzing the opinions of all the scholars.. Allah is not going to ask us which Imaam we have followed. All we have to make sure, the solution should have almost authentic connection to Prophet PBUH's sunnah. We are not living in the ages of best of generations. But we are blessed with age of technology where information are available in every one's finger tips and taps. If you have done enough research and got convinced about the fatwa of any individual and you started following him on that particular case, Insha Allah you will be rewarded though your conclusion is wrong. Respect others research. It is in the hands of Allah SWT to accept or to reject the deeds. Let us not decide for others deeds until or unless they are against shareeah and aqeedah.

I beg my friends not to involve in acts of defaming the scholars of having different issues. We have lot of other issues like bringing Islamic Eduaction to reality, wiping out Interest based economy, saving our younger generations from adultery and alcohol. We have duties to be fulfilled. Negligence will not be accepted on those issues. We dont have difference of opinions on these issues. Come on guys let us join our hands to bring up our community. Let us unite our mind to protect our future generation from adultery & alcohol. Let us not depend on Christians & Jews to feed our families. There is nothing dangerous than So called Secular Education in our country. The current generation is learning wrong history. Future generation is going to learn about other side of happenings. Your grandson will study false history as Muslims hit World Trade centers and kill five thousand peoples. The secular education system is being framed out of Islamaphobia.

Bringing the right generation is possible only through Islamization of Education. When a education can be saffronized, then why not it can be islamized. It is our duty to do that. Seeking knowledge is worship and compulsory for every Muslim. Providing such learning environment is Fard for our Ummah. Let us make our cups empty and fill with organized and real knowledge of Islam.

read more...

Tuesday 24 August 2010

சபாஷ் சரியான போட்டி... ஹா ஹா ஹா ஹா (என்ன கொடுமை சார் இது?)

read more...

Monday 23 August 2010

தமிழக இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு, ஒரு முஸ்லிமின் கேள்விகள்?

என்ன இவர்களுடைய நோக்கம்? இஸ்லாத்தை தூய வழியில் போதிகின்ற பேர்வளிகள் என்று இவர்கள் போடும் சண்டைகள் என்று ஓயும்? மார்கத்திற்கு கூட்டத்தை அழைப்பதை விட மாநாடுகளுக்கும் தங்கள் சொந்த பயான்ன்களுக்கும் கூட்டத்தை சேர்ப்பதில் மும்முரமாக செயல் படும் இவர்களுது நிய்யத்து தான் என்ன? அரசியல் வாதிகளிடம் தங்களுக்கு உண்டான மக்கள் செல்வாக்குகளை காட்டி சீட் பேரமோ. பொட்டி பேரமோ அல்லது "அம்மா" "வின்" டிவி பேரமோ நடத்துவதுதான் இவர்களது நோக்கமா? தௌஹீது என்ற பெயரில் இவர்களது தொண்டுகள் அனைத்தும் வியாபாரமா? இல்ல நீயா நானா என்ற அஹங்கார சண்டையா? எதற்காக இத்தனை சண்டை பேச்சுக்கள்? 25 வருடங்கள் முன்பு தௌஹீது என்ற உன்னத கடவுள் கொள்கையை மறந்த தமிழக முஸ்லிம்களுக்கு எத்தி வைக்க வேண்டிய மிக பெரிய பொறுப்புடன் ஆரம்பம் செய்யப்பட்ட நோக்கத்தில் தான் இன்றும் அவர்கள் இருகின்றார்களா? அவர்களுடைய மேடை பேசுகளில் மௌலீதையும், தர்காகளையும், மற்ற பிற பிட்'அத் களையும் ஒழிப்பது பற்றிய பிரசாரங்கள் குறைந்து மற்ற இயக்கத்தவர்களின் குறைகளை மாறி மாறி ஆராய்வதன் நோக்கம் என்ன? எங்கே இஸ்லாமிய இளைஞர்கள் ஒரு அணியின் கீழ் ஒன்று பட்டால் இஸ்லாமிய எதிரிகளான RSS , அமெரிக்கா, இஸ்ரேல் போன்றவர்கள் தோற்துவிட கூடும் என்ற பயத்தால் முஸ்லிம் உம்மாஹ் ஒன்று பட கூடாது என்ற நோக்கத்தில் செய்யும் சதிகளுக்கு இவர்கள் ஆளாகின்றார்களா? அல்லது அவர்களுடன் இவர்களும் கூட்டு வைத்து கொண்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறார்களா? உங்களுடைய நோக்கங்கள் தான் என்ன? அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையுடன் பிடித்து கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று அல்லாஹ் சொல்லும் வார்த்தைக்கு உங்கள் மரியாதை தான் என்ன?

தர்கா வாதிகளுடனும், தரிக்கா வாதிகளுடனும், ஷியா, காதியானி, பை-அத் கோஷ்டிகளுடனும் உங்களை கை குலுக்கி ஒற்றுமை பட கேக்க வில்லை.. அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள்.. திருந்தாவிட்டால் தண்டிக்க பட வேண்டியவர்கள்.. ஆனால் மற்றவர்கள் யாரும்மையா உங்களுக்கு? உன்னை போன்று ஷிர்க் மற்றும் பித்தத் களை குரான் மற்றும் சுன்னாஹ் வழி மூலம் எதிர்க்கும் அல்லாஹ்வின் கயிற்றை பிரச்சாரிக்கும் உன் சகோதரன் தானே.. பல கொள்கையை உடைய அரசியல் கட்ச்சிகளே அரசியல் நோகதுக்காகவும் தங்கள் சொந்த லாபதுகாகவும் குறைந்த பட்ச செயல் திட்டம் தீற்றி ஒற்றுமையாக ஐந்து வருடம் ஆட்சி நடத்தும் போது தன் வாழ்வியல் நெறியாக வணக்கம் முதல் குடும்பம் வரை ஒற்றுமையை வழியுறுத்தும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் என்று கூறிகொள்ளும் நம்மவர்களுக்கு குரானை ஒற்றுமையாக பற்றி பிடித்து கொள்வது எப்படி என்று தெரிய வில்லையா? கருத்து வேற்பாடுகள் தான் நீங்க பிரிந்து கிடப்பதன் உண்மை காரணமா? அல்லது பிரிந்து கிடந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்பது உங்கள் நோக்கமா? மார்க்கத்தை நிலை நிறுத்து வது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது நபிகளாரின் சுன்னாஹ் உங்களுக்கு கற்று தர தவறிவிட்டதா?

தெரிந்தோ தெரியாமலோ, மார்க்கம் அனுமதித்ததோ அனுமதிகவில்லையோ அரசியல் காட்சிகளுக்கு ஆதரவு என்ற விசயத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருகிறீர்கள்.. ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று பிரச்சாரம் செய்த பேர்(?)ஆசிரியர்கள் இன்று ஜன நாயக முறையில் தேர்தலில் போடி இடுகிறீர்கள்.. எங்களுக்கு அரசியல் வேணாம்(?) என்றும் தௌஹீது மட்டும்தான் (?) எங்கள் பணி என்று இயக்கத்தை பிரித்த அண்ணன்கள் இன்று மாறி மாறி ஆதரவு என்ற பெயரில் அரசியல் பண்ணுகிறார்கள்.. நாங்கள் கிலாபாத் ஆட்சி முறையை கொண்டு வருவோம் என்று இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஈரானிய இஸ்லாமிய புரட்சியை உதரணமாக எடுத்து செயல் பட்டு வந்த இயக்கங்களும் இன்று சுதந்திர தினத்தை டெல்லி இல் நடந்ததை விட மிக சிறப்பாக கேரளத்தில் நடத்தி அரசியல் கட்சி திறந்து தேர்தலில் போட்டி இடவும் செய்கிறார்கள்..

ஒவ்வொருவரும் எதாவது ஒரு விசயத்தில் ஜன நாயகத்தை ஆதரித்து கொண்டிருகிறார்கள்.. ஜன நாயகத்தை ஆதரிக்கும் நீங்கள் அதை ஆதரிக்கும் முறையிலும் ஒன்று பட்டாள் எவ்வளவு நன்றாக இருக்கும்.. இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தேசிய முஸ்லிம் லீகும் DMK மற்றும் ADMK வை மாறி மாறி ஆதரித்து தான் அழிந்தது மட்டுமில்லாமல் தமிழக முஸ்லிம்களை இட ஒதுக்கீடு பிச்சைக்காரர்களாக ஆகிய கதைகள் நீங்கள் சொல்லி தான்யா எங்களுக்கு தெரியும்.. இன்னைக்கு அப்துஸ்ஸமத் மற்றும் அப்துல்லதீப் வழியில் மிச்சம் மீதி இருக்கும் எங்கள் மானத்தையும் உரிமையையும் அழித்து செல்ல ஜைனுலாப்டீனும் ஜவாஹிருல்லாஹ்வும் வந்திருகிறீர்களா? நீங்கள் இருவரும் பெருமையுடன் மார்தட்டி கொள்ளும் 3.5 % இட ஒதுகீடினால் பயனடைந்த முஸ்லிம்களை பட்டியலிட முடியுமா?

உங்களை தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறோம்.. எப்ப எந்த RSS காரன் வந்து வீட்டு கதவ தட்டுவான் என்ற பயத்தோடும் நம் பிள்ளைகளாவது படித்து முன்னேறிவிட கூடாத என்ற ஏகதொடும் பாலைவான பூமியில் கஷ்டப்படும் எமக்கும் யாம் பிறந்த எம் சொந்த பூமியில் எதாவது வேலையோ தொழிலோ செய்யும் வாய்ப்பு கிடைக்காத என்ற தேடலோடும் வாழும் இந்த தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளை நீங்கள் பணம் மற்றும் பதவிகளை சம்பாதிக்கும் மூலதனமாக ஆக்கி விடாதீர்கள்.. எங்கள் இரத்தங்களையும் உழைப்புகளை பொருளாக அளித்து உங்கள் இயக்கங்களை வளர்த்து இருக்கிறோம். எங்கள் உணர்ச்சிகள் எம்முடைய சமுதாயம் அழிந்து விட கூடாதென்பதில் இருக்கின்றது.. அதை கேலி கூத்தாக்கி விடாதிர்கள்.. அம்மாவோ அய்யாவோ இந்த சமுதாயத்துக்கு ஏதும் செய்ய மாட்டார்கள்.. அவர்களால் முடிவது எல்லாம் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவோ அல்லது திரும்ப மீளவோ உங்களை மாறி இயக்கங்களுக்கு பொட்டி பொட்டியாக பணம் தள்ளுவது மட்டும்தான்.. அந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு பெட்டியை முஸ்லிம்களின் சவ பொட்டியாக ஆக்கிவிடாதீர்கள்..

பத்து சதவிகித இட ஒதுக்கீடு எல்லா இயக்கத்தவர்களின் ஒரே நிலைப்பாடு.. அதை குறைந்தபட்ச செயல் திட்டமாக கொண்டு பிறை, ஜகாத், அரசியல், பண பங்கீடு, இஸ்லாமிய ஆட்சி இப்படி ஏதாவது ஒரு விசயத்தில் சண்டை போட்டு கொண்டு சிதறி கிடக்கும் இயக்கங்களே சிந்தித்து செயல் படுங்கள்.. இந்த ஒரு சட்டமன்ற தேர்தலை முஸ்லிம்களின் சக்த்தியை இந்த இந்திய அரசாங்கத்திற்கு புரிய வைக்க கூடிய கடைசி வாய்ப்பாக பயன் படுத்துங்கள்.. தவறினால் தக்லீது செய்யும் முட்டாள் இளைஞர்களை தவிர அறிவு கொண்டு சிந்திக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் உங்களை ஆதரிக்க மாட்டான்.. ஒன்று பட்டால் மட்டுமே முஸ்லிம்களின் பல தேவைகளை உங்களால் தீர்க்க முடியும்.. அரசியல் ரீதியிலான அந்த மாற்றம் இஸ்லாமிய இயக்கங்களுக்கான ஒரு கூட்டமைப்பில் மட்டுமே உள்ளது.. அக்கூட்டமைப்பு இல்லாத வரை மாறி மாறி ஆதரவு கொடுத்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.. கரசேவையை ஆதரிப்பதை ஜெ நிருத்தபோவதுமில்லை தேவை பட்டாள் முஸ்லிம்களை தொல்லை கொடுத்துகொண்டிருபதை கலைஞரும் நிருத்தபோவதில்லை.. நமக்கான வாழ்வு யாரை ஆதரிகின்றோம் என்பதில் இல்லை.. யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் தயவு தேவை பட வேண்டும்.. காயிதமிள்ளத் உருவாகியதை போல..
read more...

Wednesday 18 August 2010

கடல்கள் மற்றும் ஆறுகளைப் பற்றித் திருகுர்ஆன்

தற்போதைய நவீன அறிவியலில் கடலாய்வும் ஒன்று. கடலில் ஒரு இடத்தில் இரு வேறு கடல்கள் சங்கமிக்கின்றன, அவ்வாறு அவைகள் சங்கமித்தாலும் இரண்டு கடல்களுக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் உள்ளது என்றும், மேலும் அவற்றின் வெப்பம், உப்புத்தன்மை, அடர்த்தி ஆகியவற்றிலும் தங்களது தனித்தன்மைகளுடனேயே உள்ளன என்றும், சமீபத்திய தமது ஆய்வில்
கடலாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். Principles of Oceangraphy, Davis, p.92-93.

Figure 13: The Mediterranean sea water as it enters the Atlantic over the Gibraltar sill with its own warm, saline, and less dense characteristics, because of the barrier that distinguishes between them. Temperatures are in degrees Celsius (C°).
(Marine Geology, Kuenen, p. 43, with a slight enhancement.)







உதாரணமாக, மத்திய தரைக்கடலை அட்லாண்டிக் கடலுடன் ஒப்பிடுவோமானால், மத்தியதரைக்கடல் வெதுவெதுப்பான, உப்புத்தன்மையான மற்றும் குறைந்த அடர்த்தியும் கொண்டது. ஜிப்ரால்டர் ஜலசந்தியில் மத்திய தரைக்கடல் அட்லாண்டிக் கடலுடன் சங்கமிக்கும் போது, 1000 அடி ஆழத்தில் பல நூறு மைல்கள் தூரம் அட்லாண்டிக் கடலுக்குள் பயணம் செய்கின்றது. அவ்வாறு பயணம் செய்யும் மத்திய தரைக்கடல், வெப்பம், உப்புத்தன்மை மற்றும் அடர்த்தி ஆகியவற்றில் எந்த மாற்றமும் அடையாமலேயே தன் பயணத்தை அட்லாண்டிக் கடலினுள் தொடர்கின்றது. ஆழத்திலும் மத்திய தரைக்கடல் தனது தன்மையில் மாறாத நிலையையே பெற்றிருக்கிறது. (படம் 13) Principles of Oceangraphy, Davis, p.93.

இதனிடையே இரு கடல்களிலும் உண்டாகும் பேரலைகள், சக்திவாய்ந்த நீரோட்டங்கள் மற்றும் சிற்றலைகள் போன்றவற்றின் தாக்கத்தால் எந்த பாதிப்பையும் இரு கடல்களிலும் உண்டாக்குவதில்லை.Principles of Oceangraphy, Davis, p.92-93.

இதையே திருமறையில்இறைவன், கடல்களுக்கிடையேஅவை சந்திக்கும்இடத்தில் ஒரு தடுப்புச்சுவர் உண்டு, ஆனாலும்அவை ஒன்றையொன்றுமீற மாட்டா! என்றுகூறுகின்றான். அதாவது,

இரு கடல்களை - அவைஇரண்டும்ஒன்றோடொன்று சந்திக்கஅவனே விட்டு விட்டான். (ஆயினும்) அவைஇரண்டுக்கிடையில் ஒருதடுப்புண்டு: (அத்தடுப்பானதை) அவ்விரண்டும் மீறிவிடாது. (அல் குர்ஆன்: 55:19-20).

ஆனால், மேலே நாம்பார்த்த இறைவசனத்தில்இறைவன் கடலும் கடலும்சந்திக்கும் இடத்தில்தடுப்புச் சுவர் உண்டு எனக்கூறிய இறைவன், நல்லதண்ணீர் மற்றும் கடல்நீரைப் பற்றிக் குறிப்பிடும்போது, அவைஇரண்டுக்கும் இடையேஉள்ள தடையில் ஒருஷமீற முடியாத தடுப்பை| அமைத்துள்ளோம் எனக்குறிப்பிடுகின்றான். இதையே இறைவன் தனதுதிருமறைக் குர்ஆனில்,

இன்னும் அவன்எத்தகையவனெ;னறால், இரு கடல்களையும் அவன்ஒன்றுசேர்த்திருக்கின்றான்: (அதில் ஒன்றான) இதுமிக்க மதுரமானது, தாகம்தீர்க்கக் கூடியது: (அதில்மற்றொன்றான) இதுஉப்புக்கரிப்பானது, கசப்பானது: இவ்விரண்டிற்குமிடையில்அவை ஒன்றொடொன்றுகலந்திடாமல்) திரையையும், மீறமுடியாத ஒருதடையையும் அவன்ஆக்கியிருக்கின்றான். (அல் குர்ஆன்.25:53).

திருமறையானது, கடலும்கடலும் சங்கமிக்கும்இடத்தில்அவையிரண்டுக்கும்இடையே ஒரு தடையைஏற்படுத்தியுள்ளோம் எனக்கூறும் அதே வேளையில், கடலும் நதியும் (நல்லதண்ணீர்) கலக்கும் போதுஅவையிரண்டுக்கும்இடையே திரையையும்அதையடுத்து ஒரு மீறமுடியாத தடையையும்ஏறபடுத்தியுள்ளோம் எனஏன் கூற வேண்டும்? எனஒருவர் கேள்வி எழுப்பமுடியும். இதற்கானபதிலை நவீனஅறிவியலாளர்களிடம்தான் கேட்க வேண்டும். அவர்கள் கூறுவதைப்பார்ப்போம்.

Figure 14: Longitudinal section showing salinity (parts per thousand ‰) in an estuary. We can see here the partition (zone of separation) between the fresh and the salt water. (Introductory Oceanography, Thurman, p. 301, with a slight enhancement.) (Click on the image to enlarge it.)







கடலும் நதியும் சங்கமிக்கும் கழிமுகங்களில் தங்களது ஆய்வுகளை மேற்கொண்ட அறிவியலாளர்கள், கடலும் கடலும் சங்கமிப்பதற்கும், கடலும் நதியும் சங்கமிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியலானார்கள். அதாவது இங்கே தண்ணீரின் மாறுபட்ட அடர்த்தியின் விகிதம் ஒவ்வொரு நிலையிலும் மாறுபட்டு, ஒரு விகிதத்தல் இருந்து இன்னொரு விகிதத்திற்கு மாறக்கூடிய நிலையில் அவ்விரண்டு நிலைகளுக்கும் இடைப்பட்ட அதனதன் விகிதத்தைப் பிரித்துக் காட்டக் கூடிய பகுதி தான், நல்ல தண்ணீரையும், கடல் நீரையும் பிரித்துக் காட்டும் திரையாகச் செயல்படுவதாகக் கண்டறிந்துள்ளார்கள்.ழூ இவ்விரண்டு கடல் நீர் மற்றும் நல்ல தண்ணீர் ஆகியவற்றின் உப்புத் தன்மையை விட, இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இருக்கும் நீரின் உப்புத்தன்மையின் அளவில் மாறுபாடும் காணப்படுவதால்,ழூழூ திருமறையில் இறைவன் கூறியுள்ளபடி, கடல் நீருக்கும் நல்ல தண்ணீருக்குமிடையே திரையையும், மீற முடியாத தடையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம், என்ற திருமறைக் குர்ஆனின் வசனம் அறிவியலாளர்களால் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது. (படம் 14). Oceabography, Gross, p.242. Also see Introductory Oceanography, Thurman, pp.300-301. ** - Oceanography, Gross, p.244, and Introductory Oceanography, Thurman, pp.300-301.

மேற்கண்ட தகவல்கள் யாவும் இன்றைய நவீன அறிவியல் கருவிகளின் துணை கொண்டு, நீரின் வெப்பம், உப்புத் தன்மை, அடர்த்தி, மற்றும் ஆக்ஸிஜன் கரையும் அளவு ஆகியவற்றைக் கண்டுபிடித்து அவற்றின் தகவல்களின் துணை கொண்டு தான் அறிவியல் அறிஞர்கள் இந்த பேருண்மைகளைக் கண்டறிந்துள்ளார்கள். மேலும் இரண்டு கடல்களையும் பிரிக்கும் தடுப்பை மனிதக் கண்கள் கொண்டு காண முடியாது, கடலின் மேற்பரப்பு யாவும் ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும். இதே போல கழிமுகத் துறைகளில் நின்று கவனித்தால் கூட நல்ல தண்ணீர் ஒரு பிரிவாகவோ, கடல் நீர் ஒரு பிரிவாகவோ, இவை இரண்டுக்கும் இடைப்பட்ட பகுதி (Pycnocline zone) ஒரு பிரிவாகவோ நமக்குத் தோற்றமளிக்காமல் ஒரே நீர்ப்பரப்பாகத் தான் நமக்குத் தோற்றமளிக்கும்.

கடல் பயணமே செய்தறியாத எம் பெருமானார் (ஸல்) அவர்கள் இவ்வளவு துள்ளிதமாக கடலின் தன்மைகள் பற்றி எவ்வாறு கூற முடிந்தது!!? நம்மை வியக்க வைக்கும் திருமறையை அதன் அற்புதங்களை நமது சிந்தனைக்கு வழங்கியவன் இந்த பேரண்டத்தைப் படைத்து பரிபக்குவப்படுத்தி பாதுகாத்து வரும் ஏக இறையோனாகிய அல்லாஹ் அல்லவா!!!!!

Source: http://kayalpatnamislam.blogspot.com/2010/02/blog-post_4102.html
read more...

Islam and Oceanology - BARRIER BETWEEN SWEET AND SALT WATERS

“He has let free the two bodies of flowing water, meeting together: Between them is a Barrier which they do not transgress.” [Al-Qur’an 55:19-20]

In the Arabic text the word barzakh means a barrier or a partition. This barrier, however, is not a physical partition. The Arabic word maraja literally means ‘they both meet and mix with each other’. Early commentators of the Qur’an were unable to explain the two opposite meanings for the two bodies of water, i.e. they meet and mix, and at the same time there is a barrier between them. Modern Science has discovered that in the places where two different seas meet, there is a barrier between them. This barrier divides the two seas so that each sea has its own temperature, salinity and density. (Ref: Principles of Oceanography, Davis, pp. 92-93.)

Oceanologists are now in a better position to explain this verse. There is a slanted unseen water barrier between the two seas through which water from one sea passes to the other. But when the water from one sea enters the other sea, it loses its distinctive characteristic and becomes homogenized with the other water. In a way this barrier serves as a transitional homogenizing area for the two waters.

This phenomenon is also mentioned in the following verse of the Qur'an:

“And made a separating bar between the two bodies of flowing water?” [Al-Qur’an 27:61]

This phenomenon occurs in several places, including the divider between the Mediterranean and the Atlantic Ocean at Gibralter. A white bar can also be clearly seen at Cape Point, Cape Peninsula, South Africa where the Atlantic Ocean meets the Indian Ocean. But when the Qur’an speaks about the divider between fresh and salt water, it mentions the existence of “a forbidding partition” with the barrier.

“It is He Who has let free the two bodies of flowing water: one palatable and sweet, and the other salty and bitter; yet has He made a barrier between them, and a partition that is forbidden to be passed. [Al-Qur’an 25:53]

Modern science has discovered that in estuaries, where fresh (sweet) and salt water meet, the situation is somewhat different from that found in places where two salt water seas meet. It has been discovered that what distinguishes fresh water from salt water in estuaries is a “pycnocline zone with a marked density discontinuity separating the two layers.”(Ref: Oceanography, Gross, p. 242. Also see Introductory Oceanography, Thurman, pp. 300-301.) This partition (zone of separation) has a salinity different from both the fresh water and the salt water. (Ref: Oceanography, Gross, p. 244 and Introductory Oceanography, Thurman, pp. 300-301.)

This phenomenon occurs in several places, including Egypt, where the river Nile flows into the Mediterranean Sea.

These scientific phenomena mentioned in the Qur’an was also confirmed by Dr. William Hay, a well known marine scientist and Professor of Geological Sciences at the University of Colorado, U.S.A.
read more...

இஸ்லாம் வன்முறையை வழியுருத்துகிறதா?

காஃபிர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள். அவர்களை கொலை செய்யுங்கள் என்று சொன்னதின் மூலம் - இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டுவதாக இல்லையா?

பதில்:

இஸ்லாம் வன்முறையை தூண்டக் கூடிய மார்க்கம் என்னும் கட்டுக் கதையை நிலைநிறுத்த வேண்டி - அருள்மறை குர்ஆனில் ஒருசில தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களை தவறுதலாக புரிந்து கொண்டு - இஸ்லாமியர்களுக்கு - இஸ்லாம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லி வற்புறுத்துவதாக சொல்கிறார்கள்.

1. அருள்மறை குர்ஆனின் வசனம்:

இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனத்தின் ஒரு பகுதியை மாத்திரம் எடுத்துக் கொண்டு இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் என்பதற்கு ஆதாரமாக காட்டப்படுகிறார்கள்.

'முஷ்ரிக்குகளை (இறைவனுக்கு இணைவைப்பவர்களையும், இறை மறுப்பாளர்களையும்) கண்ட இடங்களில் வெட்டுங்கள்' என்கிற வசனம்தான் அது.

2. மேற்படி வசனம் போர்ச் சூழலில் சொல்லப்படுகிற வசனம்:

இஸ்லாத்தை விமரிசிப்பவர்கள் - மேற்படி வசனம் எந்த சூழலில் சொல்லப்பட்டது என்பதை வசதியாக மறந்து விட்டு - விமரிசனம் செய்கிறார்கள். மேற்படி வசனம் எதனால் - எந்த சூழ்நிலையில் சொல்லப்படுகின்றது என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டுமெனில,; - மேற்படி அத்தியாயத்தின் முதலாம் வசனத்திலிருந்து படிக்க வேண்டும். மேற்படி வசனம் மக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கும் - இறைவனுக்கு இணைவைப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சமாதான ஒப்பந்தம் பற்றி தெரிவிக்கின்றது. மேற்படி ஒப்பந்தம் மக்காவில் உள்ள இணை வைப்பவர்களால் மீறப்பட்டது. எனவே மீறப்பட்ட ஒப்பந்தத்தை சரி செய்ய வேண்டி இணைவப்பவர்களுக்கு நான்கு மாத காலம் அவகாசம் அளிக்கப் பட்டது. இல்லையெனில் அவர்கள் மீது போர் தொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தௌபாவின் 05வது வசனம் கீழ்க்கணடவாறு கூறுகின்றது:

'போர் விலக்கப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் (நான்கு மாதங்கள்) கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை பிடியுங்கள். அவர்களை முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை குறிவைத்து உட்கார்ந்திருங்கள். ஆனால் அவர்கள் (மனந்திருந்தி, தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைபிடித்து, (ஏழை வரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடைய வனாகவும் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 9: 5)

மேற்படி வசனம் ஒரு போர்ச் சூழலில் சொல்லப்படுகின்றது.

3. அமெரிக்க - வியட்நாம் போர் - ஓர் உதாரணம்:

அமெரிக்காவிற்கும் வியட்நாமிற்கும் இடையே போர் நடந்த செய்தி நாம் அனவைரும் அறிந்த ஒன்று. அவ்வாறு போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, அமெரிக்க ஜனாதிபதியோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியோ, அமெரிக்க வீரர்களிடம் - 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று உத்தரவிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். மேற்படி போர்ச் சூழலைப் பற்றி குறிப்பிடாமல் - தனியே 'எங்கெல்லாம் நீங்கள் வியட்நாம் காரர்களை காண்கிறீர்களோ - அவர்களை கொல்லுங்கள்' என்று சொன்னதாக சொன்னால் - நாம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது அமெரிக்க ராணுவத் தளபதியையோ மிகப்பெரிய கொலையாளி என்றுதான் எண்ணத் தோன்றும். மாறாக அமெரிக்காவிற்கும் - வியட்நாமிற்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த பொழுது அமெரிக்க ஜனாதிபதி மேற்கண்டவாறு சொன்னார் என்று குறிப்யிட்டால் அது அறிவு பூர்வமாகத் தோன்றும். அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக அவ்வாறு சொன்னார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

4. அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டதே.!

அதுபோலவே அருள்மறை குர்ஆன் அத்தியாயம் ஒன்பது ஸுரத்துத் தௌபாவின் ஐந்தாவது வசனம் இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரிய மூட்டுவதற்காக சொல்லப்பட்டது. போர் நடக்கும் பொழுது எதிரிகளை கண்டு பயந்து விடாதீர்கள். அவர்களை வெட்டி வீழ்த்துங்கள் என்ற இஸ்லாமிய போர் வீரர்களுக்கு தைரியமூட்டுகிறது, அருள்மறை குர்ஆனின் மேற்படி வசனம்.

5. அருண் சூரி ஐந்தாவது வசனத்திலிருந்து 7வது வசனத்திற்கு தாவி விடுகிறார்:

இஸ்லாத்தைப் பற்றி விமரிசிப்பதையே வழக்கமாகக் கொண்டவர் இந்தியாவின் பிரபல பத்திரிக்கையாளர் அருண் சூரி. அவர் எழுதியுள்ள ' ஃபத்வாக்களின் உலகம்' என்கிற புத்தகத்தின் 572 வது பக்கத்தில் அருள்மறையின் மேற்படி வசனத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார். ஐந்தாவது வசனத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர் உடனடியாக ஏழாவது வசனத்திற்கு தாவி விடுகிறார். இதன் மூலம் அருண் சூரி ஐந்துக்கும் ஏழுக்கும் இடையில் உள்ள 6வது வசனத்தை விட்டுவிட்டார் என்பது அறிவுள்ள எந்த மனிதரும் புரிந்து கொள்ளலாம்.

6. அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் 6வது வசனம் மேற்படி கட்டுக்கதை உண்மையல்ல என்பதை தெளிவாக உணர்த்துகிறது.

அருள்மறை குர்ஆனின் ஒன்பதாவது அத்தியாயம் ஸுரத்துத் தவ்பாவின் ஆறாவது வசனம் இஸ்லாம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அருள்மறை வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது..

'(நபியே!) முஷ்ரிக்குகளில் யாரேனும் உம்மிடம் புகலிடம் தேடி வந்தால், அல்லாஹ்வுடைய வசனங்களை அவர் செவியேற்கும் வரையில் அவருக்கு அபயமளிப்பீராக!. அதன்பின் அவரை பாதுகாப்பு கிடைக்கும் வேறு இடத்திற்கு ( பத்திரமாக) அனுப்பபுவீராக. ஏனென்றால் அவர்கள் நிச்சயமாக அறியாத சமூகத்தினராக இருக்கிறார்கள்.'(அல் குர்ஆன் 9:6)

அருள்மறை குர்ஆன் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது இறைவனுக்கு இணைவைப்பவர்கள் உங்களிடம் புகலிடம் தேடுவார்கள் எனில், அவர்களுக்கு அபயமளியுங்கள் என்று சொல்வதோடு நின்று விடாமல், அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையும் வரை அவருக்கு பாதுகாப்பளியுங்கள் என்றும் வலியுறுத்துகிறது. இன்றைய நவநாகரீக உலகத்தில் அமைதியை விரும்பும் ஒரு ராணுவத் தளபதியாக இருந்தால் - போர் நடந்து கொண்டிருக்கும் பொழுது, எதிரி ராணுவ வீரர்களை மன்னித்து விட்டுவிடலாம். ஆனால் எந்த ராணுவ தளபதி எதிரி ராணுவ வீரர்களை, அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தைச் சென்றடையும்வரை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்?.

இஸ்லாமிய மார்க்கம் வன்முறையையும் - இரத்தம் சிந்துவதையும் - மூர்க்கத்தனத்தையும் தூண்டக் கூடிய மார்க்கம் இல்லை. அமைதியையும் - சமாதானத்தையும் விரும்பக்கூடிய மார்க்கம் என்பதை மேற்கூறிய குர்ஆனிய வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.
read more...

Tuesday 17 August 2010

என்னுடைய கடவுள் கொள்கை

The following is the answer for my discussion with Mr. Kathir Ray on facebook.. to know more on discussion, please click the following link..

http://www.facebook.com/#!/photo.php?pid=253748&id=100000728466588&ref=notif&notif_t=photo_reply

முஸ்லிம்கள் ஆகிய நாங்கள் பல விசயங்களில் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து கிடந்தாலும், இறைவனின் வல்லமையையும் அவனின் பண்புகளையும் பற்றி பெரும்பாலான முஸ்லிம்கள் ஒத்த கருத்தில் உள்ளனர்.. சைத்தானின் பற்றி அவருடைய நிலைபாடுதான் என்னுடைய நிலைபாடும்.. அந்த விசயத்தை நான் உங்களுக்கு என் வார்தைகாலக தட்டச்சு செய்து அனுப்பினாலும் கருத்தின் சாராம்சம் ஒன்றாக தான் இருக்கும்.. குரான் மற்றும் நபிகளாரின் பொன்மொழிகளை தான் நாங்கள் எங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்று செயல் பட்டு கொண்டிருக்கிறோம்.. மேலும் சைத்தானை பற்றிய அக்கருத்தை நீங்கள் ஏற்கவோ நம்பவோ அலசவோ வேண்டுமென்றால் கடவுள் பற்றிய சரியான புரிந்துணர்வு வேண்டும்.. தலையை விட்டுட்டு வாலை ஆராய்வதில் எந்த பிரயோஜனமும் இருக்காது என்பதை நான் திண்ணமாக நம்புகிறேன்.. என்னுடைய கடவுள் கோட்பாடு என்னவென்றால்.. "இறைவன் ஒருவனே, அவன் யாரிடத்திலும் எவரிடத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்தை கொண்டும் எந்த ஒரு தேவையுமற்ற நித்ய ஜீவன்.. அவன் யாரையும் பெறவுமில்லை அவன் யாராலும் பெறப்படவுமில்லை.. அவனுக்கு நிகராக இவ்வுலகத்திலும் எவ்வுலகதிலும் எந்த கற்களுமோ, சிலைகளோ, மனிதர்களோ, தீர்கதரிசிகளோ, அவதாரங்களோ, கன்னியாஸ்திரிகளோ, சுவாமிகளோ, தலைவர்களோ வேற எந்த உருவமோ உவமையோ இல்லை.. அவன் நாடியதுதான் இவ்வுலகின் நியதி.. அவன் சொல்படியே ஒரு கட்டுகோப்பான பாதையில் இவ்வுலகமும் அண்ட சராசரங்களும் இயங்குகிறது.. ஒரு மனிதனை அழிப்பதோ அதே நிலையில் அவனை திரும்ப ஆக்குவதோ அவனால் மட்டுமே முடியும்.. அவன் தான் இந்த உலகத்தையும் வானுக்கும் பூமிக்கும மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தது பின்னர் அவனுக்கே உரிய ஒரு இடத்தில அமர்ந்து ஆட்சி செலுத்துகிறான்.. தன்னுடைய வல்லமைகளை அறிந்து தன சொல் படி கேட்டு நடக்கின்ற வானவர் கூட்டத்தையும், தன்னுடைய வல்லமைகள் மற்றும் ஆற்றல்களை உணர்ந்து பகுத்து ஆராய்ந்து பின்பற்ற கூடிய மனித மற்றும் ஜின் இனத்தையும் அவனே படைத்தான்.. அவன் கட்டளைகளை அப்படியே ஏற்று நடக்க வானவர்கள் இருக்கும் பொழுது மற்ற இரு இனங்களுக்கு பகுத்தறிவு என்ற உயர்ந்த அறிவையும் கொடுத்து, இவ்வுலகம் பற்றிய வானவர்கள் கூட அறியாத ஞானத்தையும் கற்று கொடுத்தான்.. எல்லாம் வல்ல இறைவன் அவனுடைய ஆற்றலை விளங்க வைக்கும் பொருட்டு, அவனால் படைக்கப்பட்ட மனிதன் எல்லா சூழ்நிலைகளையும் அவனுக்கு நன்றியுள்ளவனாக அவனை மட்டும வணங்கி வழிபட கூடியவனாக இருக்கின்றானா என்பதை சோதிக்கும் பொருட்டு அவனை வழி கெடுக்கும் சூழ்நிலைகளை சைத்தான் என்ற ஜின்னின் மூலம் உருவாக்கி கொடுத்திருக்கின்றான்.. சைத்தானை எவ்வாறு நிராகரிப்பது ஒரு இறைவனை மட்டும் எப்படி வணங்குவது என்ற வழிமுறைகளையும் வேதங்கள் மற்றும் தூதுவர்கள் மூலம் வழி தவர்ந்து சென்ற, செல்லும். செல்ல இருக்கின்ற மனித சமுதாயத்தை நேர்வழிபடுத்துகின்றான்.. இவ்வளையும் செய்த அந்த கருணையாளன், இந்த உலகத்தில் அவன் செய்த நற்காரியங்களுக்கு பரிசாக சுவர்க்கம் என்ற மற்றொரு உலகத்தையும், அவன் பேச்சை கேட்காமல் உதாசினபடுத்திய மற்றும் அவனை அவன் கூறிய படி ஏற்றுகொள்ளாமல் தன் சொந்த கற்பனையின் படி நம்பி மரணித்தவர்கள் மற்றும், இன படுகொலைகள், ஆக்கிரமிப்புகள், பித்தலாட்டங்கள், மக்கள் பணத்தை கொள்ளையடித்து தன் சுயலாபத்துக்காக மனிதனையும் கொள்ளும் அரசியல் மிருகங்கள், இவ்வுலகில் தண்டனை அனுபவிக்காமல் த்யாகிகளாய் உயிர் துறந்த எத்தனையோ போலி சாமியார்கள், ஆகிய அனைவரையும் நியாயமான முறையில் விசாரித்து தண்டனை கொடுக்க நரகலோகதையும் சித்தபடுதியுள்ளான்.." அன்பு சகோதரனே நான் நம்பும் கடவுள் கொள்கை இதுதான்.. மிக தெளிவாக நம்புகிறேன்.. மேற்கூறிய எவ்விசயதிலும் எனக்கு ஒரு துளி கூட நம்பிக்கை குறைவு அல்ல..

என்னுடைய இந்த நம்பிக்கை என் தாய் தந்தை எனக்கு கற்று கொடுத்தது அல்ல.. நான் ஆகா உணர்ந்து ஆராய்ந்து நம்பும் விஷயங்கள்.. என் தாய் தந்தை அறிந்து வைத்ததிருந்த இஸ்லாம் மதத்தின் கடவுள் கொள்கை வேறு.. குரான் படித்து நான் தெளிவடைந்து என் தாய் தந்தையையும் தெளிவடைய வைத்தோம் நண்பரே.. ஆராயும்.. ஆராயும்.. ஆராய்பவர்களுக்கு இககுரான் பல அத்தாட்சிகளை கொண்டுள்ளது.. உனக்கும் எனக்குமான ஒற்றுமை ஒரு விசயத்தை ஆராய்வதில் இருக்கின்றது என நம்புகிறேன்.. பல வருடங்களுக்கு முன்பு எனக்கு தோன்றிய அதே கேள்விகள் இன்று உங்களால் கேக்கபடுகிறது.. எனக்கு கிடைத்த விடைகள் உங்களுக்கு தந்திருக்கின்றேன்.. ஏற்று கொள்வதும் நிராகரிப்பதும் உங்கள் உரிமை.. ஆனால் நீங்கள் நரகத்தில் தண்டிக்கபடகூடது என்றால் இந்த உண்மையை நீங்கள் ஏற்று தான் ஆகவேண்டும்.. ஆனந்தமா வேதனையா தீர்மானித்து கொள்ளுங்கள்.. உங்களுடைய தற்போதைய நம்பிக்கை உண்மையாக (ஒரு வேளை ) இருந்தால் நீங்கள் பிழைத்த கொள்வீர்கள்.. அது பொய்யாக இருந்து இஸ்லாம் கூறும் விஷயம் உண்மையாக இருந்தால்? குரான் பின் வருமாறு கூறுகிறது தன்னுடைய ஐம்பதாவது அத்தியாயத்தில்

"மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (16) (மனிதனின்) வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் போது- (17) கண்காணித்து எழுதக்கூடியவர் அவனிடம் (மனிதனிடம்) இல்லாமல் எந்த சொல்லையும் அவன் மொழிவதில்லை. (18) மரண வேதனை சத்தியத்தைக் கொண்டு (மெய்யாகவே) வருகின்றது (அப்போது அவனிடம்) எதை விட்டும் விரண்டோடிக் கொண்டிருந்தாயோ அது தான் (இந்நிலை என்று கூறப்படும்) (19) மேலும் ஸூர் (எக்காளம்) ஊதப்படும். அதுதான் அச்சறுத்தி எச்சரிக்கப்பட்ட நாளாகும். (20) அன்றியும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும் தன்னை அழைத்து வருபவர், சாட்சியாளர் ஆகியோருடன் வரும். (21) "நீ இதைப் பற்றி அலட்சியத்தில் இருந்தாய்; (இப்பொழுது) உன் (பார்வையை) விட்டு உனது திரையை நாம் அகற்றி விட்டோம். எனவே, இன்று உன் பார்வை கூர்மையாக இருக்கிறது." (என்று கூறப்படும்). (22) அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு) "இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது" என்று கூறுவார். (23) "மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்தோர் எல்லோரையும் நீங்கள் இருவரும் நரகில் போடுங்கள். (24) "(அவன்) நன்மையை தடுத்துக் கொண்டேயிருந்தவன்; (இந்நாளைப் பற்றி) சந்தேகிப்பவனாக, வரம்பு மீறிக் கொண்டும் இருந்தான். (25) ஆகவே நீங்களிருவரும் இவனை மிகக் கடுமையான வேதனையில் போட்டு விடுங்கள்" (என்றுங் கூறப்படும்). (26) (அப்போது ஷைத்தானாகிய) அவனுடைய கூட்டாளி கூறுவான்; "எங்கள் இறைவா! நான் இவனை வழி கெடுக்கவில்லை ஆனால், அவனே தூரமான வழி கேட்டில் தான் இருந்தான்-" (27) "என் முன்னிலையில் நீங்கள் வாக்குவாதம் செய்யாதீர்கள்; (இதைப்பற்றி என் அச்சுறுத்தலை முன்னரே விடுத்திருக்கிறேன்" என்று (அல்லாஹ்) கூறுவான். (28) (எனவே என்னுடைய) அச்சொல் "என்னிடத்தில் மாற்றப்படுவதில்லை - நான் அடியார்களுக்கு அநியாயம் செய்பவனல்லன்" (என்றும் அல்லாஹ் கூறுவான்). (29) நரகத்தை நோக்கி, "நீ நிறைந்து விட்டாயா? என்று நாம் கேட்டு, அதற்கு அது "இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?" என்று கேட்கும் அந்நாளை (நபியே! நீர் நினைவுறுத்துவீராக)! (30) (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும். (31) "இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது)." (32) எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது). (33) "ஸலாமுடன் - சாந்தியுடன் - இ(ச் சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள்; இதுதான் நித்தியமாக நீங்க்ள தங்கியிருக்கும் நாளாகும்" (என்று கூறப்படும்). (34) அவர்கள் விரும்பியதெல்லாம், அதில் அவர்களுக்கு இருக்கிறது இன்னும் (அதற்கு) அதிகமும் நம்மிடம் இருக்கிறது. (35)"


" (நபியே!) இன்னும், "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்' என்று கூறுவீராக. " அல் குரான் 17 :81
read more...