Monday 23 August 2010

தமிழக இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு, ஒரு முஸ்லிமின் கேள்விகள்?

என்ன இவர்களுடைய நோக்கம்? இஸ்லாத்தை தூய வழியில் போதிகின்ற பேர்வளிகள் என்று இவர்கள் போடும் சண்டைகள் என்று ஓயும்? மார்கத்திற்கு கூட்டத்தை அழைப்பதை விட மாநாடுகளுக்கும் தங்கள் சொந்த பயான்ன்களுக்கும் கூட்டத்தை சேர்ப்பதில் மும்முரமாக செயல் படும் இவர்களுது நிய்யத்து தான் என்ன? அரசியல் வாதிகளிடம் தங்களுக்கு உண்டான மக்கள் செல்வாக்குகளை காட்டி சீட் பேரமோ. பொட்டி பேரமோ அல்லது "அம்மா" "வின்" டிவி பேரமோ நடத்துவதுதான் இவர்களது நோக்கமா? தௌஹீது என்ற பெயரில் இவர்களது தொண்டுகள் அனைத்தும் வியாபாரமா? இல்ல நீயா நானா என்ற அஹங்கார சண்டையா? எதற்காக இத்தனை சண்டை பேச்சுக்கள்? 25 வருடங்கள் முன்பு தௌஹீது என்ற உன்னத கடவுள் கொள்கையை மறந்த தமிழக முஸ்லிம்களுக்கு எத்தி வைக்க வேண்டிய மிக பெரிய பொறுப்புடன் ஆரம்பம் செய்யப்பட்ட நோக்கத்தில் தான் இன்றும் அவர்கள் இருகின்றார்களா? அவர்களுடைய மேடை பேசுகளில் மௌலீதையும், தர்காகளையும், மற்ற பிற பிட்'அத் களையும் ஒழிப்பது பற்றிய பிரசாரங்கள் குறைந்து மற்ற இயக்கத்தவர்களின் குறைகளை மாறி மாறி ஆராய்வதன் நோக்கம் என்ன? எங்கே இஸ்லாமிய இளைஞர்கள் ஒரு அணியின் கீழ் ஒன்று பட்டால் இஸ்லாமிய எதிரிகளான RSS , அமெரிக்கா, இஸ்ரேல் போன்றவர்கள் தோற்துவிட கூடும் என்ற பயத்தால் முஸ்லிம் உம்மாஹ் ஒன்று பட கூடாது என்ற நோக்கத்தில் செய்யும் சதிகளுக்கு இவர்கள் ஆளாகின்றார்களா? அல்லது அவர்களுடன் இவர்களும் கூட்டு வைத்து கொண்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறார்களா? உங்களுடைய நோக்கங்கள் தான் என்ன? அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையுடன் பிடித்து கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று அல்லாஹ் சொல்லும் வார்த்தைக்கு உங்கள் மரியாதை தான் என்ன?

தர்கா வாதிகளுடனும், தரிக்கா வாதிகளுடனும், ஷியா, காதியானி, பை-அத் கோஷ்டிகளுடனும் உங்களை கை குலுக்கி ஒற்றுமை பட கேக்க வில்லை.. அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள்.. திருந்தாவிட்டால் தண்டிக்க பட வேண்டியவர்கள்.. ஆனால் மற்றவர்கள் யாரும்மையா உங்களுக்கு? உன்னை போன்று ஷிர்க் மற்றும் பித்தத் களை குரான் மற்றும் சுன்னாஹ் வழி மூலம் எதிர்க்கும் அல்லாஹ்வின் கயிற்றை பிரச்சாரிக்கும் உன் சகோதரன் தானே.. பல கொள்கையை உடைய அரசியல் கட்ச்சிகளே அரசியல் நோகதுக்காகவும் தங்கள் சொந்த லாபதுகாகவும் குறைந்த பட்ச செயல் திட்டம் தீற்றி ஒற்றுமையாக ஐந்து வருடம் ஆட்சி நடத்தும் போது தன் வாழ்வியல் நெறியாக வணக்கம் முதல் குடும்பம் வரை ஒற்றுமையை வழியுறுத்தும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் என்று கூறிகொள்ளும் நம்மவர்களுக்கு குரானை ஒற்றுமையாக பற்றி பிடித்து கொள்வது எப்படி என்று தெரிய வில்லையா? கருத்து வேற்பாடுகள் தான் நீங்க பிரிந்து கிடப்பதன் உண்மை காரணமா? அல்லது பிரிந்து கிடந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்பது உங்கள் நோக்கமா? மார்க்கத்தை நிலை நிறுத்து வது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது நபிகளாரின் சுன்னாஹ் உங்களுக்கு கற்று தர தவறிவிட்டதா?

தெரிந்தோ தெரியாமலோ, மார்க்கம் அனுமதித்ததோ அனுமதிகவில்லையோ அரசியல் காட்சிகளுக்கு ஆதரவு என்ற விசயத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருகிறீர்கள்.. ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று பிரச்சாரம் செய்த பேர்(?)ஆசிரியர்கள் இன்று ஜன நாயக முறையில் தேர்தலில் போடி இடுகிறீர்கள்.. எங்களுக்கு அரசியல் வேணாம்(?) என்றும் தௌஹீது மட்டும்தான் (?) எங்கள் பணி என்று இயக்கத்தை பிரித்த அண்ணன்கள் இன்று மாறி மாறி ஆதரவு என்ற பெயரில் அரசியல் பண்ணுகிறார்கள்.. நாங்கள் கிலாபாத் ஆட்சி முறையை கொண்டு வருவோம் என்று இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஈரானிய இஸ்லாமிய புரட்சியை உதரணமாக எடுத்து செயல் பட்டு வந்த இயக்கங்களும் இன்று சுதந்திர தினத்தை டெல்லி இல் நடந்ததை விட மிக சிறப்பாக கேரளத்தில் நடத்தி அரசியல் கட்சி திறந்து தேர்தலில் போட்டி இடவும் செய்கிறார்கள்..

ஒவ்வொருவரும் எதாவது ஒரு விசயத்தில் ஜன நாயகத்தை ஆதரித்து கொண்டிருகிறார்கள்.. ஜன நாயகத்தை ஆதரிக்கும் நீங்கள் அதை ஆதரிக்கும் முறையிலும் ஒன்று பட்டாள் எவ்வளவு நன்றாக இருக்கும்.. இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தேசிய முஸ்லிம் லீகும் DMK மற்றும் ADMK வை மாறி மாறி ஆதரித்து தான் அழிந்தது மட்டுமில்லாமல் தமிழக முஸ்லிம்களை இட ஒதுக்கீடு பிச்சைக்காரர்களாக ஆகிய கதைகள் நீங்கள் சொல்லி தான்யா எங்களுக்கு தெரியும்.. இன்னைக்கு அப்துஸ்ஸமத் மற்றும் அப்துல்லதீப் வழியில் மிச்சம் மீதி இருக்கும் எங்கள் மானத்தையும் உரிமையையும் அழித்து செல்ல ஜைனுலாப்டீனும் ஜவாஹிருல்லாஹ்வும் வந்திருகிறீர்களா? நீங்கள் இருவரும் பெருமையுடன் மார்தட்டி கொள்ளும் 3.5 % இட ஒதுகீடினால் பயனடைந்த முஸ்லிம்களை பட்டியலிட முடியுமா?

உங்களை தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறோம்.. எப்ப எந்த RSS காரன் வந்து வீட்டு கதவ தட்டுவான் என்ற பயத்தோடும் நம் பிள்ளைகளாவது படித்து முன்னேறிவிட கூடாத என்ற ஏகதொடும் பாலைவான பூமியில் கஷ்டப்படும் எமக்கும் யாம் பிறந்த எம் சொந்த பூமியில் எதாவது வேலையோ தொழிலோ செய்யும் வாய்ப்பு கிடைக்காத என்ற தேடலோடும் வாழும் இந்த தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளை நீங்கள் பணம் மற்றும் பதவிகளை சம்பாதிக்கும் மூலதனமாக ஆக்கி விடாதீர்கள்.. எங்கள் இரத்தங்களையும் உழைப்புகளை பொருளாக அளித்து உங்கள் இயக்கங்களை வளர்த்து இருக்கிறோம். எங்கள் உணர்ச்சிகள் எம்முடைய சமுதாயம் அழிந்து விட கூடாதென்பதில் இருக்கின்றது.. அதை கேலி கூத்தாக்கி விடாதிர்கள்.. அம்மாவோ அய்யாவோ இந்த சமுதாயத்துக்கு ஏதும் செய்ய மாட்டார்கள்.. அவர்களால் முடிவது எல்லாம் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவோ அல்லது திரும்ப மீளவோ உங்களை மாறி இயக்கங்களுக்கு பொட்டி பொட்டியாக பணம் தள்ளுவது மட்டும்தான்.. அந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு பெட்டியை முஸ்லிம்களின் சவ பொட்டியாக ஆக்கிவிடாதீர்கள்..

பத்து சதவிகித இட ஒதுக்கீடு எல்லா இயக்கத்தவர்களின் ஒரே நிலைப்பாடு.. அதை குறைந்தபட்ச செயல் திட்டமாக கொண்டு பிறை, ஜகாத், அரசியல், பண பங்கீடு, இஸ்லாமிய ஆட்சி இப்படி ஏதாவது ஒரு விசயத்தில் சண்டை போட்டு கொண்டு சிதறி கிடக்கும் இயக்கங்களே சிந்தித்து செயல் படுங்கள்.. இந்த ஒரு சட்டமன்ற தேர்தலை முஸ்லிம்களின் சக்த்தியை இந்த இந்திய அரசாங்கத்திற்கு புரிய வைக்க கூடிய கடைசி வாய்ப்பாக பயன் படுத்துங்கள்.. தவறினால் தக்லீது செய்யும் முட்டாள் இளைஞர்களை தவிர அறிவு கொண்டு சிந்திக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் உங்களை ஆதரிக்க மாட்டான்.. ஒன்று பட்டால் மட்டுமே முஸ்லிம்களின் பல தேவைகளை உங்களால் தீர்க்க முடியும்.. அரசியல் ரீதியிலான அந்த மாற்றம் இஸ்லாமிய இயக்கங்களுக்கான ஒரு கூட்டமைப்பில் மட்டுமே உள்ளது.. அக்கூட்டமைப்பு இல்லாத வரை மாறி மாறி ஆதரவு கொடுத்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.. கரசேவையை ஆதரிப்பதை ஜெ நிருத்தபோவதுமில்லை தேவை பட்டாள் முஸ்லிம்களை தொல்லை கொடுத்துகொண்டிருபதை கலைஞரும் நிருத்தபோவதில்லை.. நமக்கான வாழ்வு யாரை ஆதரிகின்றோம் என்பதில் இல்லை.. யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் தயவு தேவை பட வேண்டும்.. காயிதமிள்ளத் உருவாகியதை போல..

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

11 comments: on "தமிழக இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு, ஒரு முஸ்லிமின் கேள்விகள்?"

Am I a true Muslim? said...

Please share your comments here.. even critics are welcome..

Abu Faheem said...

அன்பரே அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்....

தங்கள் எழுதிய கருத்துக்களை நானும் வரவேற்கிறேன் சில விஷயங்களைத்தவிர முஸ்லிம்கள் அனைவரும் ஒரே அமைப்பின்கீழ்வருவார்கள் என்பதை யாரும் எதிர்பார்க்கமுடியாது பல விஷயங்களை பல அமைப்பினரும் பல முறைகளிள் செய்துவருகிறார்கள் அனைத்தும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தேவiயான விஷயங்கள்தான் ஆனால் நீ பெரியவனா நான் பெரியவனா என்ற அகம்பாவச்சன்டை போடாதவரை நலமே! அடுத்த இயக்கத்தினரை விமர்சிக்காதவரை சமுதாயத்தில் எந்தப்பிரச்சினையும் எழப்போவதில்லை அதுபோல நாங்கள் மட்டும்தான் இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்ற கிப்ர் இல்லாதவரை இந்த விஷயத்தில் எனக்குதெரிந்து நீங்கள் சுட்டிக்காட்டிய சுதந்திர தினத்தை சிறப்பாக கொன்டாடிய அமைப்பினர் மட்டும்தான் அடுத்த சமுதாய இயக்கத்தினரை வீம்புக்கு இழுப்பதில்லை மற்ற அமைப்பினர்கள் தாங்கள் தான் வழுவானவர்கள் என்பதை மேடைகள் போட்டு தம்பட்டம் அடித்துவருவதை அனைவரும் அறிவர். இவர்களின் செயற்பாடுகள் இறைவணின் உவப்பை நாடி என்றால் இவர்கள் யாருடைய திருப்திக்காகவும் செயல்படமாட்டார்கள் இவர்களின் செயல்கள் இங்கு போற்றப்படவேண்டுமென்றால் இவர்கள் இப்படி குடிமிப்பிடி சண்டை போட்டுக்கொண்டும் அடுத்தவர்களை விமர்சித்தும் காலத்தை கடத்துவார்கள் எது எப்படியோ இஸ்லாத்தின் எதிரிகள் இவர்களை பார்த்து அஞ்சுவதில்லை மாறாக சத்தமில்லாமல் தம்பட்டமடிக்காமல் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் வாருங்கள் சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக எனறழைக்கும் சுதந்திரம் நீதி பாதுகாப்பு என்ற கோஷத்தை மையமாக வைத்து செய்ல்படும் இயக்கத்தினரை பார்த்துதான் இந்திய பாஸிஸ்டுகள் அளருகிறார்கள் அல்லாஹ்விக்கே புகழனைத்தும்

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரரே, அப்படியே இயக்கங்களில் இருந்து அவர்கள் போடும் சண்டைகளை பார்த்து வெறுத்துப்போய், இன்று நடுநிலையாளர்கள் என்று ஒரு கூட்டத்தின் ஒட்டு மொத்த ஆதங்கத்தை அப்படியே பதிந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

போட்டிக்காக, கவுரவத்திற்காக, இவர்கள் எது செய்தாலும் மற்றவர்கள் போட்டிக்காக கூட்டத்தை கூட்டிக்காட்டுவதற்காக அதே செயலை செய்து கொஞ்சம் தொளிவாக இருக்கும் சகோதரர்களையும் குழப்பிவிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி செய்கிறார்கள் என்றால் இந்த மாதிரி இயக்கப்பிரிவினை நிச்சயமாக தலைதூக்கி இருக்காது.

ஒருத்தர் கூட விட்டுக்கொடுக்க மாட்டேங்குறாங்களே... தங்களின் பிரச்சார வசீகரத்தால் அவரவர் இயக்க சகோதரர்களிடம் விட்டுக்கொடுக்கும் மனோபக்குவத்தையே இல்லாமல் ஆக்கி பிடிவாதம் பிடித்த ஜீவன்களாக்கிவிட்டு விட்டார்களே...

நம்முடைய சமுதாயம் தலை நிமிர்ந்து வாழவேண்டும் என்றால் இயக்க சகோதரர்கள் தங்களின் பிடிவாதங்களை தூக்கி எறிய வேண்டும், இது என்று நடக்குமே என்ற ஏக்கம் தமிழக முஸ்லீம்கள் பலரிடம் உள்ள உள்ளக் குமுறலாகவே மட்டும் இருந்து வருகிறது. அல்லாஹ் போதுமானவன்.

ஒரு கூட்டம்(தாவா) இஸ்லாமியர்களிடமுள்ள பித் அத்களை வேறுடன் அறுக்கும் வேலையை செய்து, மாற்றார்களுக்கு இஸ்லாத்தை எடுத்துறைக்கும் பணியை செய்து நம்மிடம் இருக்கும் இஸ்லாத்தை தக்கவைத்து மாற்றார்கள் பலரை இஸ்லாத்தின் பக்கம் இழுக்கும் வேலை செய்யலாமே.

மற்ற கூட்டம் (அரசியல்) அனைத்து முஸ்லீம்களையும் ஒன்று இணைத்து அரசியல் ரீதீயாக ஒரு வலுவான பேரியக்கமாக இருந்து முஸ்லீம்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபடும் சக்தியாக இருக்காலாமே.

மு.லீக்குகளின் அரசியல் விளையாட்டில் வெறுத்துப்போய், தமிழகத்து முஸ்லீம்களின் ஒட்டு மொத்த சக்தியாக தலை தூக்கி வந்த காலத்தில் இருந்தது போல் பிளவு படாமல் இன்று இருந்திருந்தால் தமிழகத்தில் மூன்றாவது பெரும் அரசியல் சக்தியாக நம் சமுதாயம் இருந்திருக்குமே... மாநிலத்திலும் ஏன் மத்தியிலும் நம் பலம் பெருகி இருக்குமே...

ஒவ்வோரு இயக்கங்களும் இன்னும் பழைய சப்பை கட்டுகளை கட்டி தாங்கள் மட்டும் தான் சொர்க்கவாசிகள், எங்களுடம் இல்லாதவர்கள் நரகவாசிகள் என்று சொல்லு மூலச்சலவை செய்யும் போக்கை விட்டு விட்டு ஒன்றுபடுங்கள் அன்பு சகோதரர்களே....

இப்புனித ரமளானில் நம் சமுதாய ஒற்றுமைக்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீனிடம் கண்ணீர்விட்டு கையோந்துவோம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

இந்த கட்டுரையை எங்கள் வலைப்பூவில் பதியலாம் என்று எண்ணுகிறோம். அனுமதி தாருங்கள் தொடர்புக்கு adirainirubar@gmail.com.

எங்கள் அதிரை நிருபர் வலைப்பூவிற்கு வந்து பாருங்கள்.

muthuppettai.com said...

அருமை சகோதரரே! உங்களுடைய ஆதங்கம் எங்களுக்கு புரிகின்றது. ஏதோ கேள்வி கேட்கின்றோம் என்ற போர்வையில் எதை எதையோ உளறி இருகின்றீர்கள். கேள்வி கேட்கின்ற ஆற்றலை உங்களுக்கு கொடுத்த அல்லாஹ் சிந்திக்கின்ற ஆற்றலை ஏன் உங்களுக்கு கொடுக்கவில்லை என்றுதான் தெரியவில்லை. அல்லது அல்லாஹ் அந்த ஆற்றலை கொடுத்திருந்தும் நீங்கள் பயன்படுத்த தவறவிட்டீர்களா என்றும் தெரியவில்லை.
450 ஆண்டு கால வரலாற்று சிறப்பு மிக்க அல்லாஹ்வின் இறையில்லமான பாபரி மஸ்ஜிதை இடித்து அதனை தொடர்ந்து முஸ்லிம்களை கொன்று குவித்த ஹிந்துதத்துவ வெறியர்களை தட்டிகேட்பதற்கு நாதியற்ற சமுதாயமாய் இந்த முஸ்லிம் சமுதாயம் இருந்தது க்கு 1995 முன்னால்...

ஆட்சியாளர்களாக இருக்கட்டும் அதிகாரவர்க்கங்களாக இருக்கட்டும் அனைவரும் ஓர் அணியில் நின்று கொண்டு முஸ்லிம்களை எதிர்த்து அத்தனை அடக்குமுறைகளையும் அணியாங்களையும் கட்டவிழ்த்துவிட்டபொழுது அந்த கொடுமைகளை எதிர்த்து களம்கானா ஒரு முஸ்லிமும் வெளியே வர முடியாத சூழ்நிலையை உருவாக்கி இருந்தார்கள் அன்றைய அதிகாரவர்க்கத்தினர் இது எப்பொழுது 1995 க்கு முன்னால்...

நம் சமுதாயத்தின் மீது எந்த அடக்குமுறைகளை திணித்தாலும் கேட்பதற்கு யாரும் இல்லை என்ற சிந்தனையோடு ஒட்டுமொத்த எதிரிகளும் நம் சமுதாயத்திற்கு எதிராக கைகோர்த்து நின்று நம் சகோதரர்கள் கண்டன சுவரொட்டி ஒட்டியதற்காக தடா என்ற கொடிய சட்டத்தை பயன்படுத்தி பொய்வழக்குகளை போட்டு சிறைச்சாலையிலே அடைத்த பொழுது கேட்பதற்கு நாதியற்ற சமுதாயமாய் திகழ்ந்தது இந்த முஸ்லிம் சமுதாயம்தான் 1995 க்கு முன்னால்...

இப்படி நம் சமுதாயத்தின் மீது ஏவப்பட்ட அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்த்து கலம்கான அன்றைய அரசியல் கட்சியாய் பதவிகளில் இருந்த முஸ்லிம் லீக்கினரெல்லாம் ஓடிஒளிந்த தருணத்தில் அதாவது ல் இழந்த உரிமையை மீட்க இருக்கின்ற உரிமையை காக்க என்ற தாரக மந்திரத்தோடு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம்தான் இன்றும் அதேபாணியில் முன்பு இருந்த உத்வேகத்தை மிஞ்சும் அளவுக்கும் தன்னலம் பாராது இன்றும் நம் சமுதாயத்துக்காய் எல்லா துறைகளிலும் போராடிகொண்டிருக்கின்றது.

muthuppettai.com said...

இப்படி தன்னலமற்று சமுதாய சேவையையை தங்களது தேவையாய் அன்றாடம் உழைத்து கொண்டிருக்கும் சமுதாய இயக்கத்தை குறைகூற உங்களுக்கு எப்படி சகோதரரே மனம் வந்தது. சமுதாய மக்களை எந்த அரசியல் வாதிகளிடமும் விலைபேசி அடகுவைக்காமல் நம் சமுதாயத்தின் மானம்காக்க இருந்த பதவிகளையும் எதிர்நோக்கி இருந்த பதவிகளையும் தூக்கி எரிந்துவிட்டு தன்னந்தனியாய் இருபெரும் அரசியல் சக்திகளை எதிர்த்து கலம்கண்டோமே இந்த தூய பணியை செய்யும் இயக்கத்தை எப்படி சகோதரரே உங்களால் இப்படி விமர்சிக்கமுடிகின்றது.

சுயநலவாதிகளாய் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் மாறி மாறி தனது சுய அடையாளத்தை இழந்து தனது பதவி சுகத்திற்காக இந்த முஸ்லிம் சமுதாயத்தை திமுகவிடமும் அதிமுகவிடமும் அடகுவைத்துவிட்டு நம் சமுதாயத்தின் அரசியல் எழுச்சியை குழிதோண்டி புதைத்துவிட்டு சென்ற அப்துல் சமதையும் அப்துல் லத்தீபையும் முஸ்லிம்களின் அரசியல் எழுச்சிக்காக களத்தில் நின்று போராடும் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் வோடு ஒன்றிணைத்து பேசுவதற்கு அதுவும் விமர்சிப்பதற்கு எப்படி சகோதரரே உங்களுக்கு மனம் வந்தது.

நீங்கள் இருவரும் பெருமையுடன் மார்தட்டி கொள்ளும் 3.5 % இட ஒதுகீடினால் பயனடைந்த முஸ்லிம்களை பட்டியலிட முடியுமா? என்று ஒரு அறிவற்ற கேளிவியை வைத்திருக்கும் உங்களை நினைத்து பரிதாபப்படவேண்டியுள்ளது! எல்லா துறைகளிலும் முஸ்லிம்கள் முன்பு எப்படி இருந்தார்கள் இந்த இடஒதுக்கீடுக்கு பின்னால் எந்தளவு முன்னேற்றம் இந்த சமுதாயத்திற்கு வந்திருகின்றது என்பதை நாங்கள் பட்டியல் போடுவதை விட சகோதரரே நீங்கள் தாயகம் சென்றால் தகவல் பெரும் உரிமை சட்டத்தின் கீழ் எல்லா துறைக்கும் மனு கொடுத்து அரசு சார்பாகவே நீங்கள் அறிந்து கொள்ளலாம் அதற்கு பின்னர் உங்களுக்கு திருப்த்தி இல்லையென்றால் விமர்சிப்பதில் நியாயம் உண்டு.

muthuppettai.com said...

அன்புசகோதரரே ஒன்றை தெளிவாக விளங்கி கொள்ளுங்கள் எங்களுக்கு பதவிகள் மட்டுமே குறிகோளாக இருந்திருந்தால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கொடுத்த ஒரு சீட்டை வாங்கி அதிலே தலைவர் ஜவாஹிருல்லாஹ்வை நிறுத்தி இருப்போம் இன்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் வளம் வந்துகொண்டிருப்பார். பொதுசெயலாளர் ஹைதர் அலி தமிழக அமைச்சருக்கு நிகரான பதவியான வக்ப் வாரியத்தின் தலைவராக இன்றும் நீடித்திருப்பார். சவூதி அரேபியாவிற்கான இந்திய தூதராக இன்று தமுமுக வின் மாநில நிர்வாகி ஒருவர் இருந்திருப்பார். ஏதேனும் ஒரு மாநிலத்தில் கவர்னராக ஒரு தமுமுக காரன் இன்று இருந்திருப்பான். சகோதரரே அதையெல்லாம் நாங்கள் எதற்காக புறக்கணித்தோம். நீங்கள் சொல்லுவதுபோல் பணம் சம்பாதிப்பதுதான் எங்களது குறிக்கோளாக இருந்திருந்தால் இன்று அத்தாணி பதவிகளையும் தமுமுக நிர்வாகிகள் அலங்கரித்திருப்பார்கள் அதுமட்டுமா கோடி கோடியாய் சம்பாதிக்கவும் முடியும் ஆனால் அத்தனையும் சமுதாயத்திற்காக எங்கள் கால் தூசிககு சமம் என்று தூக்கி எறிந்துவிட்டு வந்த இயக்கம் தான் இன்று உங்கள் பார்வையில் குற்றவாளியாக தெரிகிறது.

ஆகவே சகோதரரே நாங்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் சமுதாயத்திற்கு நன்மை பயக்ககூடியதாகதான் இருக்குமே தவிற அது ஒருபோதும் சுயநலமாக இருக்காது என்பதை முதலில் விளங்கிகொல்லுங்கள்.அல்லாஹ்வே எல்லாவற்றையும் நன்கு அறிந்தவன்.

குறிப்பு :- சகோதரரே தமிழகத்தில் இயக்கங்கள் செயல்படுவதனால்தான் நாம் வளைகுடா நாடுகளில் கொஞ்சமாவது நிம்மதியாக இருக்கமுடிகின்றது என்பதை விளங்கிகொல்லுங்கள். அந்த பணிகளில் பங்கெடுத்து கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும், அவர்கள் (நாங்கள்) செய்யும் பணிகளை கொட்ச்சை படுத்தாமலாவது இருங்கள்.


--- முத்துப்பேட்டை முகைதீன் ---

Jaffar Sathik said...

முன்பு மார்க்க ரீதியாகவும், உலக ரீதியாகவும் ஒற்றுமையாக கோழைகளாக இருந்தோம். இப்போது, இரண்டு வகையிலும் பல பிரிவுகளாக பிரிந்து வீரர்களாக இருக்கிறோம். எதிலே என்றால், நமக்குள்ளே அடித்துக்கொள்வதிலே.

சமுதாய ஒற்றுமைக்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று இயக்கங்கள் மக்களை ஒன்றுபடுத்த வேண்டும், இல்லை மக்கள் இயக்கங்களை ஒன்றுபடுத்த வேண்டும்.


இயக்கங்களை இணைக்க முடியாது. அப்படியே ஒருவேளை இணைத்தால், யார் தலைமை இயக்கமாக இருப்பது என்பதிலே, ஒரே மேடையில் அமர்ந்து பிரச்சாரம் செய்வது என்பதிலே, (ஒருவேளை) அப்படியே ஒன்றுபட்ட சமுதாயத்திற்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டால், அதனை பங்கிட்டுக்கொள்வதிலே, அவர்கள் சார்ந்த கூட்டணி வெற்றி பெற்று அதன் மூலம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டால் அதனை சொந்தம் கொண்டாடுவதிலே, நிச்சயமாக கருத்து வேறுபாடு வரும்.
எனவே, சமுதாய மக்கள்தான், தங்களை தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூடிய ஒவ்வொரு இயக்கங்களின் "iconic face" ஆக இருப்பவர்களின் இதுவரையிலான நடவடிக்கைகளை யாருடைய வாய்வழி செய்தியையும் கேளாமல், குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஆராய்ந்து உண்மையை கண்டுபிடித்து அவர்களுக்கு சரியென்று படுவதை அல்லாஹ்வின் அச்சத்தோடு ஏற்று ஒவ்வொரு இயக்கத்துக்கும் ஆதரவு தெரிவித்தாலே, தவறான, மார்க்கத்திற்கு முரணான இயக்கங்கள் அவைகளாகவே சிதைந்து காணாமல் போய்விடும். இதை சமுதாயத்தின் ஒவ்வொரு மனிதனுக்கும் செய்ய முடிந்தால், சமுதாயம் ஒன்று படும். நம் சமுதாய மக்களில் பெரும்பாலும் அவ்வாறு செய்வதற்குரிய தகுதியிலும் இல்லை. அப்புறம் எப்படி சமுதாயம் ஒன்றுபடும்?

Am I a true Muslim? said...

அல்ஹம்துலில்லாஹ்.. இங்கு கருது தெரிவித்த விமர்சித்த அனைத்து இயக்க நண்பர்களுக்கும் என்னுடைய நன்றி.. நண்பர் முத்துபேட்டை முகைதீன் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் இன்றும் நான் மதிக்கின்ற தலைவர்களில் ஒருவர்.. அதற்காக மோடியின் கூட்டாளிகளுடனான அவருடைய கூட்டும் அதற்கு அரசியலை அரசியலா தான் பார்க்கணும் என்ற அவர்களின் விளக்கத்தையும் எவ்வாறு நியாயபடுத்த போகிறீர்கள்.. அல்லாஹ்வும் அவனுடைய தூதரின் வழிமுறையில் இதை நம்மால் நீயாயபடுத்த முடியுமா?

Am I a true Muslim? said...

அன்பானவர்களில் கவனத்திற்கு, இங்கு பதிவு செய்யப்படும் உங்களுடைய கருத்துகளோ விமர்சனங்களோ கொச்சையான வார்த்தைகள் இல்லாத வரை எந்த வித தனிக்கைகும் உட்படுத்தபடாது..

jenifer said...

ஒரு ஆண் ஊழல் , ஒரு பெண் ஊழல் ( நாகரீக வார்த்தை ? ) இந்த இரண்டு பேரில் யாராவது ஒரு நபரின்
துணையுடன் மட்டுமே , தேர்தலில் நிற்க முடியும் .யாருடன் நின்றால் என்ன ?

Post a Comment