Thursday, 24 June 2010

Free Dr. Aafiya Siddiqui



வதை முகாமில் சிதைக்கப்பட்ட பென் விஞ்ஞானி டாக்டர் ஆபியா சித்தீகி



அவரை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்

Dr.ஆபியா சித்தீக்கி மர்மமான முறையில் கடத்தப்பட்டு காணாமல் போனார் இந்த அராஜகம் நடைபெற்று நேற்றுடன் 7 வருடங்கள் ஆகியுள்ளது Dr.ஆபியா 2003 மார்ச் 30ல் பாகிஸ்தானில் மர்மமான முறையில் கடத்தப்பட்ட அவர் அமெரிக்க கட்டுபாட்டில் இயங்கும் ஆப்கானிஸ்தான் பக்ரம் (Bagram) சிறையில் அடைக்கப்பட்டு மிக கடுமையாக சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் . இங்கு அமெரிக்க , பாகிஸ்தானிய ஏஜண்டுகளால் மோசமான முறையில் பாலியல் வதைகளுக்கு ஆளானார் இந்த பயங்கரவாத அமெரிக்க கொடுமையை 2008 ஜுலை 06ஆம் திகதி பிரபல முன்னால் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் இவோன் ரெட்லி அம்பலத்துக்குக் கொண்டுவந்தார். வெளி உலகம் அறிந்து விட்டதால் அமெரிகாவுக்கு கொண்டு சென்று வழக்கு தொடர்ந்துள்ளனர் இந்த அமெரிக்க பயங்கரவாதிகள்,

இந்த 7 வது வருட பதிப்பு தினத்தில் நேற்று பாகிஸ்தானில் Dr.ஆபியா சிந்தீக்கியை உடனடியாக விடுதலை செய்யகோரி , அமைதியான ஆர்பாட்டங்கள் , விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என்பனவும் பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது இந்த நிகழ்ச்சிகளில் Dr.ஆபியா சிந்தீக்கி வதை செயப்பட்ட விதம் விபரிக்க பட்டுள்ளது அவர் பெற்ற வதைகள் மிகவும் பயங்கரமானதும் மனிதாபிமானம் உள்ள எந்த ஒரு மனிதனாலும் ஏற்றுகொள்ள முடியாதா அராஜகங்கள் அவர் பெற்ற வதைகளில் சில Dr.ஆபியா சிந்தீக்கியின் தாய் இப்படி கூறுகின்றார்

ஆறு பேர் வதை முகாமுக்கு வருவார்கள் அவர்கள் பலவந்தமா ஆபியாவை நிர்வாண படுத்தி பாலியல் வதை செய்வார்கள் அந்த நிலையில் இரத்தம் ஓடும்வரை துப்பாகிகளின் பின் புடியினால் மிக மோசமாக அறைவார்கள்

நிர்வாண படுத்தப்பட்ட ஆபியாவை கட்டில் ஒன்றில் கால்களையும் , கைகளையும் கட்டி கால்களிலும் , தலையிலும் வர்ணிக்க முடியாத சித்திர வதைகளை செய்வார்கள் அவரின் உடலில் அறியபடாத திரவங்களை ஊசியின் ஊடாக செலுத்துவார்கள் உடைகளை பலவந்தமாக நீக்கி வதை முகாமில் அவரின் தலை முடியில் பிடித்து இழுத்து வதைபார்கள்

எல்லா வற்றுக்கும் மேலாக அவரை நிர்வாண படுத்தி அல் குர்ஆனை நிலத்தில் வீசி அதன் மீது நடக்கு மாறு வதைத்துள்ளார்கள் மறுக்கும் போது மிகவும் கடுமையாக அடிப்பார்கள் என்று Dr.ஆபியாவின் தாய் கூறியுள்ளார்

அவர் சிதைக்க பட்டார், அவரின் மானம் சிதைக்கப்பட்டது ,அவரின் குடும்பம் சிதைக்க பட்டது மூன்று குழந்தைகளுடன் கடத்த பட்ட ஆபியா வர்ணிக்க முடியாத வதைகளை அனுபவித்தார் , கணவனை இழந்தார் இவருடன் கடத்த பட்ட மூன்று குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் எங்கு இருகின்றார்கள் என்ற விபரம் இன்னும் எவருக்கும் தெரியாது அனைத்தையும் இழந்த ஆபியா

மெரிக்க புலனாய்வு ஏஜன்ட்டுகாளால் ஆப்கானிஸ்தான் இரகசிய சிறையில் அடைக்கப்பட்திருந்த போது ஒரு FBI அதிகாரியிடம் துப்பாகியை பறித்து அந்த FBI அதிகாரியையும் ஒரு இராணுவ அதிகாரியையும் சுட்டார் என்றும் , பேரழிவு தாக்குதல் -mass-casualty attacks-என்று எழுதப்பட்ட ஒரு ஆவணம் வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்த பட்டு அமெரிக்க நீதி மன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு கூறியது

இதை Dr.ஆபியா வின் சட்டத்தரணி முற்றாக மறுத்தார் , அல் கைதாவுடன் தொடர்பு படுத்தி இவர் மர்மமாக கடத்த பட்டபோதும் அல் கைதாவுடன் தொடர்பு படுத்த எந்த ஆதாரமும் அமெரிக்காவுக்கு கிடைக்க வில்லை டாக்டர் ஆபியா அமெரிக்காவின் Massachusetts Institute of Technology யில் பயின்றவர். மரபியல் துறையில் தனது ஆழமான ஆய்வுக்காக PhD பட்டம் பெற்றவர்

நியூஸ்வீக் இண்டர்நேஷனல் ஜூன் 23, 2003 இதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் டாக்டர் ஆபியா அல்காய்தா பயங்கரவாதி என்று FBI குற்றம் சாட்டியது. மார்ச் 2003 ரேடியோ, டிவி, மற்றும் செய்தித்தாள்கள் என அமெரிக்க ஊடகங்கள் ஒட்டுமொத்தத்திலும் ஆபியாவின் புகைப்படங்கள் மின்னிக் கொண்டிருந்தன Dr.ஆபியாவை போலியான ஆதாரங்களின் ஊடாக கடும் தண்டனையை பெற்று கொடுபதற்கு அமெரிக்க புலனாய்வு தரப்புகள் முயல்வதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்தமை குறிபிடதக்கது தற்போது மேல் முறையிட்டு வழக்கு நடைபெறுகின்றது

தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருகும் முஸ்லிம் பெண் Dr.ஆபியா வழக்கு நேற்று 19.01.2010 அமெரிக்க நேரம் கலை 9.00... See more மணிக்கு நியூ யார்க் நகரின் விசாரனைக்கு வந்தது இவர்மீது அல் கைதாவுடன் தொடர்புடைய எந்த குற்ற சாட்டுகளும் அரச தரப்பால் முன்வைக்க முடிய வில்லை ஆனால் அமெரிக்க புலனாய்வு ஏஜன்ட்டுகாளால் ஆப்கானிஸ்தான் இரகசிய சிறையில் அடைக்கப்பட்திருந்த போது ஒரு FBI அதிகாரியிடம் துப்பாகியை பறித்து அந்த FBI அதிகாரியையும் ஒரு இராணுவ அதிகாரியையும் சுட்டார் என்றும் , பேரழிவு தாக்குதல் -mass-casualty attacks-என்று எழுதப்பட்ட ஒரு ஆவணம் வைத்திருந்தார் என்றும் குற்றம் சுமத்த பட்டுள்ளார்.

இதை Dr.ஆபியா வின் சட்டத்தரணி முற்றாக மறுத்தார் , அல் கைதாவுடன் தொடர்புடைய எந்த ஆதாரமும் இல்லாத போதும் Dr.ஆபியாவை போலியான ஆதாரங்களின் ஊடாக ஆயுள் தண்டனையை பெற்று கொடுபதற்கு அமெரிக்க புலனாய்வு தரப்புகள் முயல்வதாக பரவலாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன , வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்னர் பார்வையாளர் பக்கம் திருப்பி பேசிய Dr.ஆபியா தனக்கு எந்த தாக்குதலுடனும் தொடர்பு இல்லை என்று குறிபிட்டார் வழக்கு விசாரணை தொடங்கிய பின்னர் வழக்கின் சாச்சி ஒன்றை இடை மரித்தார் என்ற குற்றசாட்டின்பெயரில் கோட் ரூமை விட்டும் பொலிசாரினால் வெளியேற்றபட்டார் இவர் வெளியேற்றப்படும்போது தான் பேச அனுமதிக்க படவில்லை எனக் கூறி சென்றார்

மனிதாபிமான அமைப்புகள் இஸ்லாமிய இயக்கங்கள் என்பன ஒன்றிணைந்து நேற்றைய தினத்தை “Free Dr Aafia Siddiqui Day” , “டாக்டர் .ஆபியா சிந்தீக்கி விடுதலை நாளாக” பிரகடனம் செய்தமை குறிபிடதக்கது அமெரிக்க நிர்வாகம் மேற்கொண்டுவரும் நியாயமற்ற வதைச்செயல்களை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் Dr.ஆபியா சிந்தீக்கி உடனடியாக விடுவிக்குமாறும் கோரும் ஆர்பாட்டங்கள் நேற்று முன்தினம் பாகிஸ்தான் , U.S., UK, ஆஸ்திரேலியா , ஸ்பெயின் , கத்தார் , துர்கி , போன்ற நாடுகளில் இடம் பெற்றுள்ளன.

இந்த வழகின்போது இவர் சட்ட விரோதமாக கடத்தபட்டமை , இவரின் மூன்று குழந்தைகள் கடத்தபட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை , இவர் நிர்வான படுத்தப்பட்டு FBI ,CIA சித்திரவதை அதிகாரிகளால் பாலியல் சித்திரவதைகளுக்கு உட்படுத்த பட்டமை போன்ற எந்த விடையங்களும் நேற்று எடுக்க படவில்லை என்பது குறிபிடதக்கது.

Courtesy: Sister Fathima Farhana. Sri Lanka




Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "Free Dr. Aafiya Siddiqui"

Post a Comment